Looking For Anything Specific?

ads header

யாருடா இந்த மஸ்க்





 இக்காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் எலான் மஸ்க். அவரை நிஜ

வாழ்க்கையில் இரும்பு மனிதன் எனவும் நவீன ஹென்றி ஃபோர்ட் எனவும் அழைக்கிறார்கள். 2021 தை இல் உலக பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.

வணிகநோக்கத்துடன் இருப்பதைவிடவும் பொறியியல்

மனநிலையிலிருந்து அவர் செயற்படுகிறார்.


எலான் மஸ்க் 28 ஆனி மாதம் 1971 இல் பிரிட்டோரியா தென்னாபிரிக்காவில் பிறந்தார். அவர்

தனது 8 வயதிலியே கணனி மொழிகளை தானாகக் கற்றுக்கொண்டார். 12 வயதில் கணனி

விளையாட்டு ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து ஊதியம் பெற்றுக் கொண்டார். குயின்ஸ்

பல்கலைக்கழகத்திலும் பின்  பென்சில்வேனியா பல்கலைக்கழத்தில் பௌதிகவியல் மற்றும் வணிகத்தில் பட்டம் பெற்றார். 

ஆரம்பத்தில் ஜிப்-2 பேபோல் போன்ற வணிகங்களை தொடங்கினார். 2002 இல் விண்வெளிக்கு

செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவர் செலவு குறைந்த மீள உபயோகிக்க கூடிய

ரொக்கட்களை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். அவரது 4 ஆவது

முயற்சியில் வெற்றிகரமாக ரொக்கட்டை விண்ணில் ஏவினார். 


அதன் பிறகு நாசா உடன் 

கைகோர்த்தார். தற்போது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில்

ஈடுபட்டுள்ளார். 



மறுபுறம் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மின்சார மகிழுந்துகள் உற்பத்தியை

வெற்றிகரமாக செய்து வருகிறார். தற்போது அதன் தலைமை அதிகாரியாக உள்ளார். மாற்று

எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என வற்புறுத்தும் அவர் 2016 இல் சோலார் சிட்டி என்ற

நிறுவனத்தை வாங்கி மேம்படுத்தினார். போரிங் நிறுவனத்தை நிறுவி ஹைப்பெலுாப் எனும்

திட்டத்தை முன்வைத்தார். நகரங்களுக்கிடையே விரைவாக பயணிக்கக் கூடியவாறான குழாய்கள்

மூலமான போக்குவரத்து திட்டம் அது. நியுராலிங்(சுகாதார பராமரிப்புக்காக) மற்றும் ஓபன்எஐ போன்ற

ஆராய்ச்சி நிறுவனங்களிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்.


Post a Comment

0 Comments