Looking For Anything Specific?

ads header

யுவன் எனும் போதை மாத்திரை


விருதுக்கு ஏங்கி நிக்கும் இசையமைப்பாளர் மத்தியில் இரசிகனின் விசிலை  விருதுகா ஏற்ற இசையமைப்பாளர் யுவன்.  ஆராரோ.... ஆராரோ...  எனும் தாலாட்டை கேட்டு நிம்மதியா தூங்கியவர்களை விட போகாதே.... போகாதே.... எனும் பாடலை கேட்டு தூக்கம் கேட்டு அலைந்தவர்களே பலர். அவ்வாறான இசைக்கு சொந்தக்காரர் தான் யுவன் சங்கர் ராஜா. 


எப்பொழுதும் பிரபலங்களின் வாரிசு என்றாலே அவர்கள் மீது  எதிர்பார்ப்பு அதிகம். அந்த எதிர்பார்ப்பு யுவன் மீதும் இருந்தது. ஒழுங்கா படித்து கொண்டு இருந்த யுவனை நீ   ஓர் இசை ஞானி மகன் உன் ரத்தத்தில்  இசை கலந்துள்ளது என்று உசுப்பேத்தி பாடசாலை கல்வி விட்டு முழு நேர இசை கலைஞ்சனா  மாறவைத்தது யுவனை.



எவ்வாறு இருந்தாலும் தனக்கென ஒரு ஓர் பெயர் வேண்டும்  என்று " அரவிந்தன் " எனும் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் உள்ள பாடல்கள் இசைஞானி பாடல்கள் போலா உள்ளன ena மக்கள் விமர்சிக்க தொடங்கினார்கள். தனது தந்தை பேச்சை கேட்டது போதும் இனி யாது செய்தாலும் தந்தை கூறியதுக்கு எதிராக செய்வம் ena முடிவெடுத்து இசையமைத்த படம் தான்" தீனா ". இப்படம் இசை ரீதியா மிகவும் பேசப்பட்டது. இதே ராஜதந்திரத்தை அடுத்துவரும் படங்களில் யுவன் கடைபிடித்தார். அவர் எதிர்பார்த்தது போல அனைத்து பாடல்களும் புதுமையான இசை ena பேசப்பட்டது 



பாராட்டு புகழ் என  சிறப்பாக சென்ற வாழ்க்கையில் திருமணம் வந்தது. திருமணமாக வந்தால் பிரச்னை இல்லை திரி மனமாக வந்தது தான் பிரச்னை. ஒருவருடன் காலம் தள்ளுவதே பிரச்சனையாக இருக்கும் போது மூவருடன் காலம் தள்ளுவதிலும் தனது இசையும் வாழ்க்கை மறந்து போனார். இந்த காலத்தில் மூன்று எனும் படத்தில் இசைஅமைப்பாளர்க அறிமுகமான அனிருத் யுவன் அவர்களை விட வளந்து சென்று கொண்டு இருந்தார்.  





தன்னை எல்லோரும் மறந்து விட்டார்கள் தான் மீண்டும் இந்த துறைக்கு மாசாக அறிமுகம் தரவேண்டும் என்று "மாஸ் " எனும் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகம் தந்தார். யுவன் இல்லாவிடின்னும் அவரின் பாடல்களை கேட்டு மனதை ஆறுதல் படுத்திகொண்டு இருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. இன்றும் முதன்மை இசையமைப்பாளர்களில் ஒன்றாக தனக்கென ஓர் இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டி கொண்டுள்ளார் யுவன்.

Post a Comment

0 Comments